குளுவாங், மே.09-
தனது பராமரிப்பில் விடப்பட்ட ஐந்து மாதக் கைக்குழந்தையைச் சித்ரவதை செய்ததாக ஆயம்மா ஒருவர், குளுவாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
20 வயது அமீரா ஹாஜீரா முகமட் பாஃரிட் என்ற அந்த ஆயம்மா, நீதிபதி ஒஸ்மான் அப்பெஃண்டி முகமட் ஷாலே முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, இரவு 8.30 மணியளவில் ஜோகூர், குளுவாங், Enche Besar Hajjah Khalsom மருத்துவமனையின் பணியாளர் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு தஸ்காவில் அப்பெண் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அந்தப் பெண் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.