கோலாலம்பூர், மே.09-
பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரான தனது மகள் நூருல் இஸா, கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிடம் கருத்து கேட்ட போது, அக்கேள்விக்கு பதில் அளிப்பதைத் தவிர்த்தார்.
தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ள நானே இப்போதுதான் வேட்புமனுத் தாக்கல் செய்யப் போகிறேன் என்று சிரித்தப்படி கூறியவாறு, நிருபர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளிப்பதை அன்வார் தவிர்த்தார்.
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவராக நடப்புத் தலைவர் ரபிஃஸி ரம்லி தொடர்ந்து இருப்பார் என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறி வந்த நிலையில் திடீரென்று தனது மூத்த மகள் நூருல் இஸாவைத் துணைத் தலைவர் பதவிக்கு களம் இறக்கப்பட்டு இருப்பது பிகேஆர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.