எனது சொத்துகளில் 99 விழுக்காட்டைத் தானம் செய்வேன் – பில் கேட்ஸ்

லண்டன், மே.10-

அடுத்த 20 ஆண்டுகளில் தனது சொத்துகளில் 99 விழுக்காட்டைத் தானம் செய்யப் போவதாக மைக்ரோசோப்ட்டின் நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates) அறிவித்துள்ளார்.

தமது அறக்கட்டளையின் மூலம் அதனைச் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார். 2045ஆம் ஆண்டில் அறக்கட்டளையின் செயல்பாடுகளை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

“என் இறப்பிற்குப் பிறகு பலர் என்னைப் பற்றி விமர்சிக்கக்கூடும். ஆனால் ஒரு போதும் நான் செல்வந்தராக இறந்தேன் என்று கூற வாய்ப்பு தரமாட்டேன்” என்றார்.

69 வயதாகும் பில் கேட்ஸ் இதுவரை சுமார் 100 பில்லியன் டாலரைச் சுகாதார, வளர்ச்சித் திட்டங்களுக்கு அளித்திருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS