வாஷிங்டன், மே.10-
இரு தரப்புத் தாக்குதலை நிறுத்திவிட்டு, உடனடியாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த நாட்டின் 3 ராணுவ தளங்களைக் குறி வைத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதே வேளையில், ஜம்மு காஷ்மீர், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவமும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்தச் சூழலில், இரு தரப்பு தாக்குதலை நிறுத்திவிட்டு, உடனடியாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, ஜி7 நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உயர் பிரதிநிதிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.