தூதரகங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்து

பெட்டாலிங் ஜெயா, மே.10-

தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் மலேசியர்கள் குறிப்பாக மாணவர்கள், அங்குள்ள மலேசியத் தூதரகங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் கேட்டுக் கொண்டார்.

ஆபத்து அவசர வேளைகளில் ஏதாவது உதவிக் கோருவதற்கு சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள மலேசியர்கள், தங்களின் முழு விவரங்களையும் நமது தூதரகங்களில் வழங்குமாறு முகமட் ஹசான் வலியுறுத்தினார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எல்லைத் தாக்குதல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதால், ஆபத்து இருக்கக்கூடிய இடர்மிக்கப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று மலேசியர்களுக்கு அமைச்சர் முகமட் ஹசான் அறிவுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS