டிரெய்லர் லோரி ஓட்டுநருக்கு 4 நாள் தடுப்புக் காவல்

ஜோகூர் பாரு, மே.10-

கடந்த வியாழக்கிழமை, வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ஜோகூர் வழித்தடத்தில் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் தாய்க்கும் மகளுக்கும் மரணம் விளைவித்தது தொடர்பில் லோரி ஓட்டுநர் ஒருவர், விசாரணைக்கு ஏதுவாக 4 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

37 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர், 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் வரும் மே 13 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றனர்.

அந்த ஓட்டுநரின் சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

தகரங்களை ஏற்றிக் கொண்டுச் சென்று கொண்டிருந்த டிரெய்லர் லோரி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பிக்கப் லோரி ஒன்றை மோதியதுடன், லோரி சாலைத் தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர்த்திசையில் சாலையில் நுழைந்ததில் இரண்டு கார்களை மோதித் தள்ளியது.

இதில் ஒரு காரில் பயணம் செய்த 42 வயது மாது கீ யின் சின்னும், அவரின் 15 வயது மகள் நியோ ஜோ ஈ என்பவரும் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

WATCH OUR LATEST NEWS