சிரம்பான், மே.10-
சிரம்பான், பாரோயில் கடும் காயங்களுக்கு ஆளாகும் வரையில் ஐந்தாம் படிவ மாணவன் ஒருவனைச் சரமாரியாக அடித்ததாகச் சந்தேகிக்கப்படும் பத்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று அதிகாலை 3 மணியளவில், கம்போங் செந்தோசா ஜெயா, புஃட்சால் விளையாட்டுத் திடலிலும், அருகில் உள்ள ஓர் உணவகத்திலும் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை செய்து கொண்ட புகாரைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் சம்பவம், தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹாட்டா சீ டின் தெரிவித்தார்.
தாக்குதலுக்கு ஆளான 17 வயதுடைய மாணவன் இடது கன்னம் கன்றியிருப்பதுடன், உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.