ஜார்ஜ்டவுன், மே.10-
சமையல் கட்டில் சோற்றுப் பானைகள் மற்றும் குழம்புகள் வைக்கப்பட்ட இடத்தில் எலியின் எச்சங்கள் குவிந்து இருப்பதைத் தொடர்ந்து பினாங்கு மாநிலத்தில் ஒரு நாசி கண்டார் கடை உட்பட 4 உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
பினாங்கு, ஜாலான் திரெங்கானுவில் வீற்றிருக்கும் ஒரு நாசிக் கண்டார் உணவகமும், இதர மூன்று உணவகங்களும் அடுத்த 14 நாட்களுக்கு மூடும்படி உத்தரவு நோட்டீஸ் சார்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பினாங்கு மாநகர் மன்றத்தின் லைசென்ஸ் வாரியம் இந்த நோட்டீஸை வெளியிட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை அப்பகுதிகளில் உள்ள உணவகங்களில் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையை 26 பேர் கொண்ட அதிகாரிகள் மேற்கொண்டதாக அதன் தலைமை அதிகாரி அமாலினா நபிலா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.