மலேசிய பூப்பந்து சங்கத்தின் புதிய தலைவராக தெங்கு ஸாப்ஃருல் தேர்வு

கோலாலம்பூர், மே.10-

மலேசிய பூப்பந்து சங்கத்தின் புதிய தலைவராக தெங்கு ஸாப்ஃருல் அஸிஸ் ஏகனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய பூப்பந்து சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாப்ஃருல், போட்டியின்றி ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மலேசிய பூப்பந்து சங்கத்திற்குப் புத்துயிர் அளிப்பதற்கு ஒரு நிறுவனப் பிரமுகராக நன்கு அறியப்பட்ட ஒரு முதலாளியையும், நிறைய அனுபவமுள்ள ஓர் அமைச்சரையும் சங்கத்தின் தலைவராகக் கொண்டு வருவதற்கு தெங்கு ஸாப்ஃருலைச் சங்கத்தின் உச்சமன்ற உறுப்பினர்கள் அதிகளவில் விரும்பியதாக அதன் இடைக்காலத் தலைவர் எஸ். சுப்பிரமணியம் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS