புத்ராஜெயா, மே.10-
எஸ்பிஆர்எம் விசாரணையில் ஆஜராகுவதற்காக புற்றாஜெயாவிற்குச் செல்வதாகக் கூறிச் சென்ற ஒரு வர்த்தகப் பெண்மணியான டத்தின் பமேலா லிங், கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் 25 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இதனை புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அய்டி ஷாம் முகமட் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் உள்ள அவரின் மூன்று பிள்ளைகளின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் முயற்சியிலும் தாங்கள் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரகத்தில் அந்த மூன்று பிள்ளைகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு மலேசியப் போலீசார், அனைத்துலக போலீஸ் துறையான இண்டர்போலின் உதவியையும் நாடியிருப்பதாக ஏசிபி அய்டி ஷாம் மேலும் தெரிவித்தார்.