கோலாலம்பூர், மே.10-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் தலைமை ஆணையராக டான் ஶ்ரீ அஸாம் பாக்கியின் பதவிக் காலம், மூன்றாவது தவணையாக நீட்டிக்கப்பட்டதில் தமக்கு உடன்பாடுயில்லை என்று பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நூருல் இஸா அன்வார் தெரிவித்துள்ளார்.
ஊழல் தடுப்பு ஆணையத்தில் ஒரு நபரின் பதவிக் காலத்தை மூன்று தவணையாக நீட்டிக்கப்பட்டு இருக்கும் முடிவு தவறானதாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வியான நூருல் இஸா குறிப்பிட்டார்.
பணி ஓய்வு பெற வேண்டியவர்களின் பதவிக் காலத்தை, இழுத்துப் பிடித்து இப்படியே நீட்டித்துக் கொண்டு இருந்தால், நாட்டின் நன்னெறிமிக்க முக்கிய பரிபாலனத்தில் மாற்றங்கள் என்ற கட்டமைப்பை ஏற்படுத்துவது என்பது சிரமாகிவிடும் என்று தமது X தளத்தில் நூருல் இஸா நினைவுறுத்தியுள்ளார்.