பாசிர் மாஸ், மே.11-
இம்மாதத் தொடக்கத்தில் தனது 11 வயது மகனைக் கத்தியால் குத்திய பாசிர் மாஸ் ஆடவரின் காவல் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மீதான காவல் நேற்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாசிர் மாஸ் காவல்துறைத் தலைவர் காமா அஸுரால் முகமட் தெரிவித்தார்.
கத்தியால் குத்தப்பட்ட சிறுவனின் நிலை தற்போது சீராக உள்ளது. அவர் சுயநினைவு பெற்றுள்ளார். இருப்பினும் அவர் இன்னும் ராஜா பெரெம்புவான் ஸைனாப் II மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றம் சாட்டப்பட்டவர் மனநலப் பிரச்சினைகள் உள்ளவர். கடந்த 2008 முதல் மனநல சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்திற்கானக் காரணம் அவரது மூன்றாவது மனைவியுடன் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதுதான் என்று நம்பப்படுகிறது.