ஜோகூர் பாரு, மே.11-
கடந்த திங்களன்று ஜோகூர், தாமான் ஶ்ரீ பெலெந்தோங்கில் ஆற்றில் குப்பைகளைக் கொட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும். இந்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர விசாரணை அறிக்கை ஒன்று திறக்கப்பட்டுள்ளது என்று ஜோகூர் எஸ்டபள்யுகோர்ப் இயக்குநர் ஸைனால் பிஃட்ரி அஹ்மாட் தெரிவித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு 10 ஆயிரம் ரிங்கிட் முதல் ஒரு இலட்சம் வெள்ளி வரை அபராதம் அல்லது ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இதற்கு முன், இந்த நிறுவனத்திற்கு ஜோகூர் பாரு மாநகராட்சி மன்றம் ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.