ஶ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினரின் சேவை மையத்தின் கார் சேதப்படுத்தப்பட்டது

பத்து பாஹாட், மே.11-

ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினரின் சேவை மையத்திற்குச் சொந்தமான ஓர் அதிகாரப்பூர்வ வாகனம் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று காலை சேதப்படுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் அமினோல்ஹூடா ஹாசான் கூறுகையில், அலுவலகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த டொயோட்டா எஸ்திமா வகை வாகனம், மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்களால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. அலுவலகத்தில் பணியில் இருந்த அதிகாரி குற்றவாளிகளைப் பிடிக்க முயன்ற போது தோல்வியடைந்தார். ஆனால் சந்தேக நபரின் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை பதிவு செய்ய முடிந்தது.

யொங் பெங் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் காவல் துறையினர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்து வாகனம், ஆடைகள், கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

WATCH OUR LATEST NEWS