ஜார்ஜ்டவுன், மே.11-
பினாங்கு காவல் துறையினர் நேற்று நடத்திய தனித்தனி சோதனைகளில் நான்கு ஆண்களைக் கைது செய்து உரிமம் இல்லாத கடன் வழங்கும் கும்பலை முறியடித்துள்ளனர். 34 முதல் 42 வயதுடைய சந்தேக நபர்கள் உரிமம் இல்லாமல், ஆன்லைன் மூலமாகவும் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், மாநிலம் முழுவதும் குடியிருப்பு வளாகங்களில் சாயம் தெளிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகவும் நம்பப்படுகிறது என்று பினாங்கு காவல் துறைத் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் தெரிவித்தார்.
சோதனையில் ஒரு டொயோட்டா வியோஸ் கார், ஐந்து கைபேசிகள், முகமூடிகள், சிவப்பு சாயம், ஆவணங்கள், குற்றச் செயல்கள் தொடர்பான பல்வேறு கருவிகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் சந்தேக நபர்கள் பினாங்கு, பேரா, கெடா ஆகிய மூன்று மாநிலங்களில் 33 சாயம் தெளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர்.