தாவாவ், மே.11-
மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் எம்சிஎம்சி, தாவாவில் நடைபெற்ற மடானி ரக்யாட் பிஎம்ஆர் 2025 சபா நிகழ்ச்சியில் மருந்துகளை ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் அனுப்பும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த ட்ரோன் திட்டம், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும், பலனைக் கொடுக்கும் ஒரு திட்டமாக தேசிய தகவல் பரவல் மையமான நாடி அரங்கில் முக்கிய கவனத்தை ஈர்த்தது.
பிரதமர் அன்வார் இப்ராஹிம் இந்த ட்ரோன் திட்டத்தைப் பார்வையிட்டார். இந்த முயற்சி, சுகாதார அமைச்சு, MRANTI போன்ற முதன்மைக் கூட்டாளர்களுடன் இணைந்து, கிராமப்புற, தொலைதூரப் பகுதிகளில் உள்ள நாடி மையங்களுக்கு சுகாதார நிலையங்களில் இருந்து மருந்துகளை விரைவாகவும் திறம்படவும் கொண்டுச் செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.