தாவாவ், மே.11-
மடானி அரசாங்கம் இதுவரை 14 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 144 வளர்ச்சித் திட்டங்களை சபா மாநிலத்தில் செயல்படுத்தியுள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இந்தத் திட்டங்களில் தாவாவ் மருத்துவமனை, லாஹாட் டத்து சிறைச்சாலை மேம்பாடு, செபங்கார் பேயில் கொள்கலன் துறைமுகம் கட்டுமானம், கோத்தா கினபாலுவில் இதய மருத்துவ மையம் அமைப்பதற்கான முன்மொழிவு ஆகியவை அடங்கும்.
தாவாவை முன்னோடித் திட்டத் தலமாகக் கொண்டுள்ள மடானி சூரிய சக்தி திட்டத்திற்கு அரசாங்கம் 350 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் சில தடைகள் இன்னும் உள்ளன என்று அன்வார் ஒப்புக் கொண்டார். சபா முழுவதும் உள்ள சிறிய கடைகளையும் கூடாரங்களையும் பராமரிப்பதற்காகக் கூடுதலாக 10 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.