ஹரிமாவ் மலாயா-கேப் வெர்டே இடையிலான ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை

கோலாலம்பூர், மே.12-

பீட்டர் கிளாமோவ்ஸ்கி தலைமையிலான ஹரிமாவ் மலாயா காற்பந்து அணி எதிர்வரும் மே 29 ஆம் தேதி, செராஸ் கால்பந்து மைதானத்தில் உலகத் தரவரிசையில் 72வது இடத்தில் உள்ள கேப் வெர்டே அணியை எதிர்கொள்ளும் என்று மலேசியக் கால்பந்து சங்கம் எம்ஏஎம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இவ்விரு அணிகளும் வரும் ஜூன் 3 ஆம் தேதியன்று புக்கிட் ஜாலில் தேசிய மைதானத்தில் இரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இரண்டாவது முறையாகச் சந்திக்கவுள்ளன.

இஃது 2027 ஆசிய கோப்பை தகுதிச் சுற்று எஃப் பிரிவின் இரண்டாவது ஆட்டத்தில் ஜூன் 10, 2025 அன்று புக்கிட் ஜாலில் தேசிய மைதானத்தில் வியட்னாமை எதிர்கொள்வதற்கான ஹரிமாவு மலாயா அணியின் தயார் நிலையின் ஒரு பகுதியாகும். இந்த இரு ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் மே 12ஆம் தேதி காலை 10:00 மணி முதல் இணையதளத்தில் விற்பனை செய்யப்படும்.

WATCH OUR LATEST NEWS