ஜோகூர் பாரு, மே.12-
ஜோகூர் பாருவைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற ஒருவர் இணையத்தள முதலீட்டு மோசடியில் சிக்கி 4 இலட்சத்து 59 ஆயிரம் ரிங்கிட்டை இழந்தார். அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து வாட்ஸ்அப் மூலம் வந்த முதலீட்டு வாய்ப்பை நம்பி அவர் கடந்த ஜனவரி 10 முதல் ஏப்ரல் 17 வரை 10 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அத்தொகையை மாற்றியுள்ளதாக ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்டக் காவல் துறைத் தலைவர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
முதலில் 18 ஆயிரத்து 360 ரிங்கிட் இலாபம் கிடைத்ததால் மேலும் முதலீடு செய்யத் தூண்டப்பட்டார். பின்னர் இலாபத்தை எடுக்க “செயலாக்க கட்டணம்” செலுத்தும்படி கேட்கப்பட்டார். ஆனால் வாக்குறுதியளிக்கப்பட்ட வருமானம் கிடைக்கவில்லை.