மே.12-
சிரம்பானில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் மணப்பெண் ஒருவர் திருமணத்திற்கு வரமுடியவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து நெகிரி செம்பிலான் மாநில கல்வித் துறைக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்தச் சம்பவம் குறித்து எந்தப் புகாரும் தங்களுக்கு வரவில்லை என்று மாநில கல்வித் துறை இயக்குநர் காலிடா ஓமார் தெரிவித்தார்.
இந்தச் செய்தி உண்மையா இல்லையா என்பதை மாநில கல்வித் துறையால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், இது தொடர்பாக மேலும் தகவல்களைச் சேகரித்து வருவதாகவும் அவர் கூறினார். இன்று காலை வரை எந்த தரப்பிலிருந்தும் எந்த அறிக்கையும் அல்லது புகாரும் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.