புறாக்களுக்கு உணவளித்த ஐவருக்கு அபராதம்

ஜார்ஜடவுன், மே.12-

கடந்த மாதம் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளித்த ஐந்து தனிநபர்களுக்கு அபராதம் விதித்துள்ளது பினாங்கு மாநகராட்சி மன்றம். சாலைகள், வடிகால்கள், கட்டடங்கள் சட்டம் 1974 இன் பிரிவு 47(1) இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒவ்வொரு குற்றத்திற்கும் 250 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படுகிறது என அம்மன்றம் கூறியது.

மீறினால் அல்லது அபராதம் செலுத்தத் தவறினால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிக்கும் நோக்கத்துடன் உணவுக் கழிவுகளை வேண்டுமென்றே கொட்டியதாக அவர்கள் கண்டறியப்பட்டனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சிலர் அறிவுறுத்தல்களைப் புறக்கணிப்பதாக எம்பிபிபி தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS