கோலாலம்பூர், மே.12-
வேப் விற்பனைக்கு எந்தவொரு தடையும் விதித்தால் பயனீட்டாளர்கள் கள்ளச் சந்தைக்கு தள்ளப்படுவார்கள் என்று வேப் ஆதரவு குழு தெரிவித்துள்ளது. வேப் விற்பனை தடை மசோதா போன்ற தடைவிதிக்கும் கொள்கைகளை மலேசிய வேப் வணிக சபை எதிர்த்துள்ளது. ஏனெனில் இவை “பயனற்றதாக” இருக்கும் என அது கூறியுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் தேவையை அகற்றாது மாறாக கள்ளச் சந்தையை ஊக்குவித்து, ஒழுங்குபடுத்தப்படாத, தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு பயனீட்டாளரை வெளிப்படுத்தும் என்று எம்விசிசி தெரிவித்துள்ளது. ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட தீர்வுகளில் கொள்கை வகுப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று எம்விசிசி வலியுறுத்தியுள்ளது. இது பயனீட்டாளர்கள் பாதுகாப்பு, தொழில்துறை நிலைத்தன்மை, பொருளாதார பங்களிப்பு ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும்.