கோலாலம்பூர், மே.12-
விசாக தினம் கருணை, நல்லிணக்கம், அமைதி போன்ற உலகளாவிய விழுமியங்களை உயர்த்துவதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது. மலேசியாவில் விசாக தினக் கொண்டாட்டம், பல்லின சமூகத்தில் மனித கண்ணியத்தையும், பரஸ்பர மரியாதையையும் மேம்படுத்தும் அழைப்பாக உள்ளது எனக் கூறியுள்ளார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்.
ஒருமைப்பாடு கொண்ட நாட்டிற்காக நாம் அனைவரும் இந்த விழுமியங்களை ஊக்குவிக்க வேண்டும். அதே நேரத்தில் நமது மரபுகளையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என விசாக தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் குறிப்பிட்டார்.