அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள படம் AA22 x A6. இப்படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். இதுவரை இப்படத்திற்குத் தலைப்பு வைக்கவில்லை. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். அண்மையில்தான் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

இப்படத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், மிருணால் தாகூர் மற்றும் ஜான்வி கபூர் கதாநாயகிகளாக ஒப்பந்தமாகியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அது குறித்து அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை.

இந்நிலையில், அட்லீ – அல்லு அர்ஜுன் இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து அண்மையத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் எனக் கூறப்படுகிறது. 

WATCH OUR LATEST NEWS