காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள ‘மாமன்’ படம் இம்மாதம் 16 ஆம் தேதி வெளியாகிறது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.
அண்மையில் நடந்த படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சூரி, இனி தாம் ஹீரோவாக மட்டுமே நடிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். ‘எனக்கு யாருடனும் போட்டி கிடையாது. ஒரு கட்டத்தைத் (நகைச்சுவை) தாண்டி வந்துவிட்டேன். இனி மீண்டும் அந்த பாதைக்குச் செல்வது கடினம். அப்படி நடித்தாலும் கூற, அந்த கதாபாத்திரம் வலிமையானதாகவும், என்னை மக்கள் மத்தியில் இன்னும் ஆழமாக கொண்டு செல்லும் கதாபாத்திரமாக இருக்க வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.