32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க இந்திய அரசு உத்தரவு

புதுடெல்லி, மே.12-

போர் பதற்றம் தணிந்துள்ள நிலையில், மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக, முன்னதாக எல்லையோர மாநிலத்தில் உள்ள 32 விமான நிலையங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மே 9ம் தேதி முதல் வரும் மே 15ம் தேதி காலை 5.29 மணி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

எனினும் தற்போது போர் பதற்றம் தணிந்துள்ள நிலையில், மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், சண்டிகார், ஜெய்சால்மர், ஜம்மு, ஜோத்பூர் ஆகிய விமான நிலையங்களும் அவற்றில் அடங்கும்.

WATCH OUR LATEST NEWS