குஷிநகர், மே.12-
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரால் ஈர்க்கப்பட்டு, உத்தர பிரதேச மாநிலத்தில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு சிந்தூர் என்று பெற்றோர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு-காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழிக்க இந்திய ராணுவம் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கியது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மருத்துவக் கல்லூரியில் மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்களில் பிறந்த 17 புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிந்தூர் என்று பெயரிட்டுள்ளனர். அப்பெயர் அர்த்தம் பொதிந்ததாகவும் ஓர் உத்வேகத்தை வழங்குவதாகவும் உள்ளது என அவர்கள் பெருமை பொங்கக் குறிப்பிட்டுள்ளனர்.