கிள்ளான் துறைமுகம், மே.12-
கிள்ளான் துறைமுகத்தின் திறந்த வர்த்தகப் பகுதியில் நடத்திய சோதனைகளில் அரிசி, மின் சாதனப் பொருட்கள், மின்சார சைக்கிள்கள், ethyl அல்கோஹால் உள்ளிட்ட 7 இலட்சத்து 72 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள நான்கு வகையானப் பொருட்களைக் கடத்த முயன்றதை சிலாங்கூர் மாநில சுங்கத்துறை முறியடித்துள்ளதாக சிலாங்கூர் மாநில சுங்கத்துறையின் இயக்குநர் துன் நொர்லேலா ஆஸுமி ரம்லி தெரிவித்தார். இந்தப் பொருட்கள் யாவும் கடந்த மார்ச் மாதம் 20 ஆம், 25 ஆம் தேதிகளில் கைப்பற்றப்பட்டதாக அவர் தகவல் வெளியிட்டார்.