கப்பாளா பாதாஸ், மே.12-
பினாங்கு, கப்பாளா பாதாஸில் உள்ள எம்ஆர்எஸ்எம் எனப்படும் மாரா இளநிலை அறிவியல் கல்லூரி அதிகாரப்பூர்வமாக எம்ஆர்எஸ்எம் துன் அப்துல்லா அஹ்மாட் படாவி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் ஐந்தாவது பிரதமரின் சேவைகளுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்தப் பெயர் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி இந்தப் பெயர் மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மறைந்த துன் அப்துல்லாவின் மகன் டான் ஶ்ரீ கமாலுடின் அப்துல்லா, மாரா தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.