குட்டி யானை இறந்தது – மூன்றாவது சம்பவம்

ஷா ஆலாம், மே.12-

பேரா, கெரிக்-ஜெலி நெடுஞ்சாலையில் லாரி மோதியதில் குட்டி யானை ஒன்று இறந்த சம்பவத்தோடு, இந்த ஆண்டு ஏற்பட்ட மூன்றாவது சம்பவம் ஆகும். இந்த மூன்று மரணங்களில் இரண்டு பேரா மாநிலத்திலும் ஒன்று ஜோகூர் மாநிலத்திலும் நிகழ்ந்தன என்று வனவிலங்கு, தேசிய பூங்காக்கள் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் காடீர் அபு ஹஷிம் தெரிவித்தார்.


இறந்த குட்டிகளில் இரண்டு ஆண் யானைகள் வாகனங்களால் அடிபட்டு இறந்தன, மற்றொன்று பெண் யானை, அது சாக்கடையில் விழுந்து காயமடைந்தது. வளர்ச்சித் திட்டங்களுக்காக வனவிலங்கு வாழ்விடங்கள் திறக்கப்படுவதால், உணவுக்காவும் இனப் பெருக்கத்திற்காகவும் சாலைகளைக் கடக்கும் வனவிலங்குகள் விபத்துகளுக்கு ஆளாகின்றன.
வனவிலங்கு கடக்கும் அடையாளப் பலகைகள், சூரிய சக்தி விளக்குகள் அமைப்பது, வனவிலங்குகளை மனிதர்கள் இல்லாத தொலைதூர வாழ்விடங்களுக்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை பெர்ஹிலிதான் மேற்கொண்டு வருகிறது.

WATCH OUR LATEST NEWS