தெலுக் இந்தானில் கலாச்சாரக் கலை விழா

தெலுக் இந்தான், மே.12-

பேரா, தெலுக் இந்தான் சித்திராப் பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு ஹிலிர் பேரா மாவட்ட சமூகநல, முன்னேற்ற இயக்கமும், தெலுக் இந்தான் ஷைனிங் ஸ்டார்ஸ் அமைப்பும், மலேசிய டிஜிட்டல் முன்னேற்ற அமைப்பும் இணைந்து மாபெரும் கலாச்சார கலை விழாவை மிகச் சிறப்பாக நடத்தினர்.

தெலுக் இந்தான் இரமலான் சந்தை வளாகத்தில் நடைபெற்ற இந்த வண்ணமயமான கலை விழாவில் ஷைனிங் ஸ்டார்ஸின் கலைஞர்களின் ஆடல், பாடல் உட்பட பல கலை வடிவங்களை மக்களுக்காகப் படைத்ததாகத் தெரிவித்தார் ஷைனிங் ஸ்டார்ஸ் அமைப்பின் தலைமைச் செயல்முறை அதிகாரி சாதனை சுடர்மணி மாஸ்டர் உகாந்தருன் சுகுமார். இரவு 7 மணிக்குத் தொடங்கிய இந்த விழா, மக்களின் சிறப்பான ஆதரவினால், நள்ளிரவு வரை நீடித்தது.

WATCH OUR LATEST NEWS