புத்ராஜெயா, மே.12-
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இஸா அன்வாரின் வேட்புமனுவுக்கு சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலீனா ஒத்மான் சையிட் ஆதரவு தெரிவித்தார். பிரதமரின் மூத்த மகளான அவரின் வேட்புமனு, பிரதான அரசியலில் அதிக பெண்கள் ஈடுபடுவதற்கான தொடக்கப் புள்ளியாகக் கருதப்படுகிறது என்று அவர் கூறினார்.
காஸாவில் உள்ள பாலஸ்தீனிய மக்களின் உரிமைகளுக்காக நூருல் இஸா போராடியதற்கு அஸாலீனா பாராட்டு தெரிவித்தார். காஸா மக்களின் பாதுகாப்பு என்பது மதம், அரசியல் அல்லது எல்லைப் பிரச்சினை மட்டுமல்ல, மாறாக உலகளாவிய மாந்தநேயப் போராட்டமாகும் என்று அவர் கூறினார்.