பெட்டாலிங் ஜெயா, மே.12-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இரஷ்யா அதிபர் விலாடிமிர் பூடீனின் அழைப்பை ஏற்று நாளை முதல் மே 16 வரை இரஷ்யாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தில் மே 13 முதல் 15 வரை மாஸ்கோவிற்கும், மே 15, 16 ஆம் தேதிகளில் தாதார்ஸ்தானின் கஸானுக்கும் செல்கிறார்.
தாதார்ஸ்தானின் ரயிஸ் குடியரசின் ருஸ்தாம் மின்னிகாநோவ் அழைப்பின் பேரில் 16வது காஸான் பொருளாதார மன்றத்தில் அன்வார் பங்கேற்கிறார். மாஸ்கோ மாநில பன்னாட்டு உறவுகள் பல்கலைக்கழகத்தில் அன்வார் உரையாற்றுவார். மேலும் ரஷ்ய வணிகர்களையும் மாஸ்கோவில் உள்ள மலேசிய புலம் பெயர்ந்தோரையும் சந்திப்பார்.