புதுடெல்லி, மே.13-
இந்தியாவின் ஆப்பரேஷன் சிந்தூர் முடியவில்லை. பாகிஸ்தான் இனி வாலாட்டினால் உடனே பதிலடி என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எல்லைத் தாண்டிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தருவதில் புதிய பாய்ச்சலைக் காட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கான இந்தியாவின் பதிலடி முன்பை விட அதிவேகத்துடன் இருக்க வேண்டும். துப்பாக்கி குண்டுகளுக்கு பீரங்கிகளால் பதில் அளிக்கப்படும் என்று மோடி எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடங்கியுள்ள , ‘ஆப்பரேஷன் சிந்துார்’ இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை எதிரிகளுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன் என்று மோடி ஆவேசமாகக் குறிப்பிட்டார்.
கடந்த மே 7 ஆம் தேதி அதிகாலை துவங்கி நான்கு நாட்கள் நீடித்த இந்தியா – பாகிஸ்தான் போர், கடந்த மே 10 ஆம் தேதி நிறுத்திக் கொள்ளப்படுவதாக இந்தியாவும், பாகிஸ்தானும் அறிவித்தன.