பாலிக் பூலாவ், மே.13-
லோரி ஒன்று சாலையை விட்டு விலகி, கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட ஓட்டுநரை மீட்பதற்கு, தீயணைப்பு, மீட்புப் படையினர் சுமார் இரண்டு மணி நேரம் கடுமையாகப் போராடினர்.
இச்சம்பவம் நேற்றிரவு 10.20 மணியளவில் பினாங்கு, பாலிக் புலாவ், ஜாலான் துன் சார்டோனில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து, 20 நிமிடத்தில் சம்பவ இடத்தைச் சென்றடைந்த வீரர்கள், தார் கற்களை ஏற்றி வந்த அந்த லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் ஓட்டுநர் சிக்கிக் கிடப்பதைக் கண்டறிந்தனர்.
லோரியை நிலைப்படுத்தி, உயிரிழந்த ஓட்டுநரை மீட்பதற்கு வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் கடுமையாகப் போராடியதாக பினாங்கு தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் ஜோன் சாகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.