தெலுக் இந்தான், மே.13-
அரச மலேசிய போலீஸ் படையின் கலகத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த 8 எப்ஃஆர்யூ வீரர்கள், விபத்தில் உயிரிழந்தனர். எப்ஃஆர்யூ வாகனமும், கல் லோரியும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டதில் எட்டு வீர்ர்கள் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் தெலுக் இந்தான், ஜாலான் சீகுஸ்-சுங்கை லம்பாம் என்ற இடத்தில் நிகழ்ந்தது. எட்டு வீரர்களும் வாகனத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்ததாக மலேசிய தீயணைப்பு, மீட்புப்படையின் பேரா மாநில இயக்குநர் சயானி சைடோன் தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான எப்ஃஆர்யூ லோரியில் ஓட்டுநர் உட்பட 15 வீரர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது இந்த விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமுற்ற இதர வீரர்கள், தெலுக் இந்தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.