பமேலா வெளிநாட்டிற்கு ஓடியிருக்கலாம்

புத்ராஜெயா, மே.13-

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி எஸ்பிஆர்எம் விசாரணைக்குச் செல்வதாகக் கூறி, வீட்டிலிருந்து புறப்பட்ட வர்த்தகப் பெண்மணி டத்தின் ஶ்ரீ பமேலா லிங், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர் வெளிநாட்டிற்கு ஓடியிருக்கலாம் என்ற சாத்தியம் குறித்து போலீசார் தற்போது தீவிரமாகப் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

பமேலா விவகாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட இதர சந்தேகப் பேர்வழிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அந்தப் பெண், வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அய்டி ஷாம் முகமட் தெரிவித்தார்.

சட்டவிரோதப் பணம் மாற்றம் தொடர்பாக பமேலாவை விசாரணை செய்ய எஸ்பிஆர்எம் தொடங்கியது முதல், அவரின் நடமாட்டத்தையும் அந்த ஆணையம் கட்டுப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

பமேலா காணாதது குறித்து அவரின் மூன்று பிள்ளைகளிடமும் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்யவிருப்பதாக ஏசிபி அய்டி ஷாம் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS