சிகமாட், மே.14-
கழிப்பறையில் இருந்த மாதுவைக் கைப்பேசியில் ரகசியமாக வீடியோ படம் எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 4 ஆம் தேதி ஜோகூர், சிகமாட், பண்டார் புத்ராவில் உள்ள ஓர் உணவகத்தின் கழிப்பறையைப் பயன்படுத்திய மாது, வெளியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த நடமாட்டத்தைக் கண்டு, கதவைத் திறந்த போது, 20 வயது இளைஞர் கைப்பேசியுடன் அங்கு நின்று கொண்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.
பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து கடந்த மே 9 ஆம் தேதி 20 வயது மதிக்கத்தக்க உள்ளூர் ஆடவரைப் போலீசார் கைது செய்தாக சிகமாட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் ஸம்ரி மாரின்சா தெரிவித்தார்.
பிடிபட்ட நபரின் கைப்பேசியைச் சோதனையிடப்பட்ட போது பெண்களின் 16 ஆயிரம் புகைப்படங்களைப் பதிவிறக்கம் செய்து இருப்பது தெரியவந்துள்ளதாக அஹ்மாட் ஸம்ரி குறிப்பிட்டார்.
அந்தப் படங்களில் இரண்டு, பெண்கள் கழிப்பறையில் இருந்த காட்சியாகும் என்று அவர் மேலும் விவரித்தார்.