கோலாலம்பூர், மே.14-
2 கோடியே 10 லட்சம் ரிங்கிட் சம்பந்தப்பட்ட சட்டவிரோதப் பணமாற்றம் நடவடிக்கைகள் மற்றும் தகுதியற்ற கடன் கோரிக்கையை அங்கீகரித்தது தொடர்பில் இரண்டு முன்னணி வங்கிகளில் மூன்று அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
வங்கியின் வர்த்தகம் தொடர்பான நிர்வாகி, வங்கி இலாகா தலைவர் மற்றும் வங்கிக் கிளை நிர்வாகி ஆகியோரே அந்த மூன்று வங்கி அதிகாரிகள் ஆவர் என்று எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த 2024 ஆம் ஆண்டில் மூன்று நிறுவனங்களிடமிருந்து லஞ்ச வடிவில் பெற்றப் பணத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத பண மாற்றம் நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் தகுதியற்றக் கடன்களை அங்கீகரித்துள்ளதாக அந்த மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நிறுவனங்கள் மொத்தம் 2 கோடியே 10 லட்சம் ரிங்கிட் கடனைப் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஐந்து விண்ணப்பங்களை அங்கீரிப்பதில் இந்த மூன்று வங்கி அதிகாரிகளும் பெரியளவில் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.