ஈப்போ, மே.14-
தெலுக் இந்தான் சாலை விபத்தில் தங்களின் இன்னுயிரை நீத்த, கலகத் தடுப்புப் போலீஸ் பிரிவின் ஒன்பது வீரர்களுக்கு, போலீசார் நடத்திய இறுதி மரியாதை சடங்கில் அவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஈப்போ, சுங்கை செனாம், மத்திய சேமப்படையின் 5 ஆவது போலீஸ் பிரிவு, அந்த ஒன்பது வீரர்களுக்கும் உரிய மரியாதை செலுத்தி பிரியாவிடை தந்தது.
ஒன்பது வீரர்களின் உடல்களும் இன்று அதிகாலை 3 மணியளவில் தத்தம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. வீரர்களின் உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னதாக ஜாலோர் கெமிலாங் கொடி போர்த்தப்பட்டு, அவர்களின் தியாகத்திற்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் அபு ஹனிபா, போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அயோப் கான் மைடின் பிட்சை, பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.