மாஸ்கோ, மே.14-
ரஷியாவிற்கு 4 நாள் அதிகாரத்துவ வருகையை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார்.
மலேசிய நேரப்படி நேற்றிரவு 11.26 மணியளவில் மாஸ்கோ, வ்நுகோவா அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்த பிரதமருக்கு, விமான நிலையத்தில் மகத்தான சிவப்புக் கம்பள வரவேற்பு நல்கப்பட்டது.
தமது நான்கு நாள் அலுவல் பயணத்தில், ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் ரஷிய பிரதமர் மிக்காயில் மிஷுஸ்தின் ஆகியோருடன் சந்திப்பு நடத்துவார்.
மலேசியாவிற்கும், ரஷியாவிற்கும் வியூகம் நிறைந்த புதிய துறைகளில் இரு வழி ஒத்துழைப்பு கொள்வது ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.