தெலுக் இந்தான் விபத்து: 60 க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும்

தெலுக் இந்தான், மே.14

தெலுக் இந்தானில் நேற்று நிகழ்ந்த கோர விபத்தில் கலகத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 9 போலீஸ்காரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புலன் விசாரணைக்கு உதவும் வகையில் 60 க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று கீழ் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டாக்டர் பக்ரி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.

விபத்து நிகழ்ந்த போது அவ்விடத்தில் இருந்த ஃஎப்ஆர்யூ போலீஸ்காரர்கள், கற்களை ஏற்றி வந்த லோரியின் உரிமையாளர் உட்பட இந்த விபத்தில் தொடர்புடையவர்கள் என்று அடையாளம் காணப்படும் நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதே வேளையில் இந்த விபத்து குறித்து தகவல் கொண்டிருப்பவர்கள் அல்லது விபத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசாருடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS