தெலுக் இந்தான் விபத்து: ஒருவர் வீடு திரும்ப அனுமதி

தெலுக் இந்தான், மே.14-

தெலுக் இந்தான் விபத்தில் காயமுற்ற கலகத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஒன்பது போலீஸ்காரர்களில் ஒருவர், இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் A. சிவநேசன் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை ஒருவர், வீடு திரும்ப அனுமதிக்கப்பட்ட வேளையில் இதர எட்டுப் போலீஸ்காரர்கள், இன்னமும் தீவிர கண்காணிப்பு பிரிவில் உள்ளனர் என்று சிவநேசன் மேலும் கூறினார்.

ஒருவர் , ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் மற்ற அனைவரும் தெலுக் இந்தான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் நால்வர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக இன்று தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சிவநேசன் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் உயிரிழந்த ஃஎப்ஆர்யூ போலீஸ்காரரான சார்ஜன் எஸ். பெருமாளுக்கு, இறுதி மரியாதை செலுத்தும் வகையில் ஈப்போ, லாஹாட்டில் உள்ள அவரின் இல்லத்திற்கு சிவநேசன் சென்றிருந்த போது செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட போலீஸ்காரர்களின் நலன் சார்ந்த விவகாரங்களை பேரா மாநில அரசாங்கம் உறுதிச் செய்யும் என்று சிவநேசன் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS