கோலாலம்பூர், மே.14-
வர்த்தகப் பெண்மணி டத்தின் ஶ்ரீ பமேலா லிங் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சிங்கப்பூரில் இருக்கும் அவரின் இரண்டு பிள்ளைகளிடம் போலீசார் விரைவில் வாக்குமூலம் பதிவு செய்வர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.
42 வயதுடைய பமேலா குறித்து இதற்கு முன்பு ஆராயப்பட்டதில் அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்றும், அவர்கள் சிங்கப்பூரில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்குச் செல்வதாகக் கூறிச் சென்ற பமேலா இது வரை காணவில்லை. பமேலாவை புத்ராஜெயாவிற்கு அழைத்துச் சென்ற இ-ஹெய்லிங் ஓட்டுநர், தனது போலீஸ் புகாரில் , தனது காரை மூன்று வாகனங்களில் வழிமறித்த 3 நபர்கள், பமேலாவைக் கடத்திச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.