உலக ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறினார் எஸ்.சிவசங்கரி

சிக்காகோ, மே.14-

அமெரிக்கா, சிக்காகோவில் தொழில்முறை ஸ்குவாஷ் சங்கத்தின் உலக ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. அதில் தேசிய வீராங்கனை எஸ். சிவசங்கரி காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்திருக்கிறார். மூன்றாவது சுற்றில் அவர் உபசரணை நாட்டு வீராங்கனை அமான்டா ஷோபியைத் தோற்கடித்தார். 3-0, 11-8, 14-12, 11-6 என்ற புள்ளிகளில் சிவசங்கரி வெற்றி பெற்றார். அவர் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 34 நிமிடங்கள் மட்டுமே.

காலிறுதிச் சுற்றில் சிவசங்கரி ஒலிவியா வியெவருடன் களம் இறங்கவிருக்கிறார். உலகத் தர வரிசையில் 9 ஆவது இடத்தில் இருக்கும் சிவசங்கரி அப்போட்டியில் மலேசியாவின் போராட்டத்தைத் தொடரும் ஒரே பிரதிநிதியாகத் திகழ்கிறார். முன்னதாக ஆடவர் பிரிவில் நாட்டின் ங் யென் யோவ் தோல்வி கண்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS