கோல பிலா, மே.14-
சிமெண்ட் லோரியுடன் மோதிய காரோட்டி ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் நெகிரி செம்பிலான், ஜாலான் கோல பிலா-தம்பின் சாலையில் நிகழ்ந்தது.
வோல்வோ ரக சிமெண்ட் கொள்கலன் லோரியும், புடோட்டோன் சாகா ரகக் காரும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டதாக கோல பிலா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் முஸ்தாப்பா ஹூசேன் தெரிவித்தார்.
காரோட்டி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, லோரியுடன் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.