கூச்சிங், மே.14-
கடந்த ஜனவரி மாதம் வாகனத்தை மிக அபாயகரமாகச் செலுத்தி, ஐவருக்கு மரணத்தை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 15 வயது இளைஞர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
சரவாக், கூச்சிங், ஜாலான் ஸ்துதோங் பாருவில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்த இளைஞருக்கு எதிரானக் குற்றச்சாட்டு, மாஜிஸ்திரேட் லிங் ஹுய் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 10 ஆண்டு சிறை மற்றும் 50 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த இளைஞர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.