19 ஆயிரத்து 980 ரிங்கிட் கட்டணத்தில் பிஎச்டி முனைவர் பட்டம் பெறலாம்

கோலாலம்பூர், மே.14-

19 ஆயிரத்து 980 ரிங்கிட் செலவில் மிக மலிவு விலையில் அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிஎச்டி முனைவர் பட்டம் பெறுவதற்கு இந்திய சமூகத்திற்கான ஒரு விழிப்புணர்வு அழைப்பை கல்விமானாகிய டாக்டர் சிவபிரகாஷ் விடுத்துள்ளார்.

போலி பட்டங்கள், குறிப்பாக கௌரவ முனைவர் பட்டங்கள் சந்தைப்படுத்தப்படுவதற்கு எதிராக உரக்கக் குரல் கொடுக்கும் ஒரு சட்ட ஆலோசகரைப் போல் செயல்பட்டு வருபவர் டாக்டர் சிவபிரகாஷ்.

போலியான ஒரு முனைவர் பட்டத்திற்கு ஆயிரக்கணக்கில் செலவிட்டு வாங்குவதை விட உண்மை மற்றும் நேர்மையான வழியில் ஆய்வின் வழி பிஎச்டி முனைவர் பட்டம் பெறுவது என்பது நமது சமூகத்தை மேம்படுத்த வல்லதாகும்.

அதே வேளையில் அடுத்த தலைமுறைக்கு ஓர் உயரிய அளவுகோலைக் கட்டமைக்கும் ஓர் உண்மையான கல்வி அடைவு நிலைக்கு இது வழிவகுக்கும் என்கிறார் டாக்டர் சிவபிரகாஷ்.

பிஎச்டி முனைவர் பட்டம் பெறுவதற்கு யார் விண்ணப்பிக்க முடியும்?

A அங்கீகாரம் மற்றும் அங்கீகாரம் பெற்ற டிகிரி பட்டம் + 5 வருட பணி அனுபவம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எம்பிஏ தகுதியைக் கொண்டவர்கள் இதற்கு விண்ணபிப்பிக்கலாம்.

அவர்கள் மிக மலிவுக் கட்டணத்தில் அங்கீகாரம் பெற்ற பிஎச்டி பட்டம் பெறுவது என்பது இப்போது எளிதில் சாத்தியமாகக்கூடியதாகும்.

உள்ளூர், எம்கியூஏ அங்கீகாரம் பெற்றத் தனியார் பல்கலைக்கழகக் கல்லூரியுடன் இணைந்து, மிக மலிவுக் கட்டணத்தில் மலேசியாவில் பிஎச்டி முனைவர் பட்டம் பெறுவதற்கு டாக்டர் சிவபிரகாஷ் வழிகாட்டுகிறார்.

மொத்த கடட்ணம் 19 ஆயிரத்து 980 ரிங்கிட் மட்டுமே. வகுப்புகள் இல்லை, தேர்வுகள் இல்லை, 100 விழுக்காடு ஆராய்ச்சி அடிப்படையிலானது. இத்தொகையைத் தங்கள் இபிஎப் சேமிப்பில் இருந்து மீட்க முடியும். இந்த முனைவர் பட்டம் முதலாளிகள் மற்றும் அரசு நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு மேலாக எம்கியூஏ எனப்படும் Malaysian Qualification Agency-யினால் அங்கீகரிக்கப்பட்டது.

முறையான முனைவர் பட்டம் பெறுவதற்கும், உங்கள் சகாக்களையும் எதிர்காலச் சந்ததியினரையும் உயர்ந்த இலக்கை அடைய ஊக்குவிப்பதற்கும் உங்களுக்கு இதுவொரு வாய்ப்பாகும்.

டாக்டர் சிவாவை இன்றே வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளவும்: 012-5356345.

WATCH OUR LATEST NEWS