கோலாலம்பூர், மே.14-
சிறுநீரக நோயினால் அவதியுற்று வரும் 49 வயது கோமகன் தேவதாஸின் வீட்டை ஏலம் விடுவதை பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகு எம்பாங்க் இன்று ஒத்தி வைத்தது.
உடல் நலக்குறைவினால், வீட்டுக் கடனின் மாதாந்திரத் தவணைப் பணத்தைச் செலுத்த முடியாமல் சிரமத்தை எதிர்நோக்கியிருந்த கோமனின் வீட்டை, ஏலம் விடுவதை நிறுத்துமாறு எம்பாங்கிற்கு பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
அதனை எம்பாங்க், பொருட்படுத்தாத நிலையில், இறுதியில் மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம் தலையிட்டதைத் தொடர்ந்து ஏலத்தை ஒத்தி வைக்க அந்த வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
கோமகனின் காப்புறுதிப் பணம் கிடைக்கும் வரையில் ஏலத்தை ஒத்தி வைக்குமாறு இன்று மாலையில் எம்பாங்க் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக பிஎஸ்எம் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் கார்த்திகேஸ் ராஜமாணிக்கம் தெரிவித்தார்.