மாஸ்கோ, மே.14-
ரஷ்யாவை மலேசியாவின் பால்ய நண்பர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வர்ணித்துள்ளார். ரஷ்யாவிற்கு நான்கு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், தலைநகர் மாஸ்கோவில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இன்று சந்திப்பு நடத்தியப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
ரஷ்ய அதிபருடனான சந்திப்பின் போது மலேசியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே பல்வேறு துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்புக்கான நம்பிக்கையை டத்தோஸ்ரீ அன்வார் வெளிப்படுத்தினார்.